மற்ற பிற புத்திலக்கிய மாடெர்னிச படைப்பாளர்கள் பலரில் இருந்து திலீப்குமார் வேறு பட்டிருப்பதற்கு அவரது மொழிபெயர்ப்பாற்றல் முக்கியமானது க.நா.சு. ஆங்கில மூலத்தைக் கொண்டு ஐரோப்பிய அமெரிக்க இலக்கிய படைப்புகளை தமிழுக்குத் தந்திருக்கிறார். எனினும் தாம் மிகவும் போற்றிப்புகழ்ந்த புதுமைப் பித்தனைக் கூட ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. நான் அறிந்தவரை நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்" மட்டுமே ஆங்கிலத்ததுக்குக் கொண்டு சென்றார்.
திலீப்குமாருக்குப் பெயர் சொல்லக்கூடியது அண்மையில் வெளியான அவரது 100 ஆண்டுகால தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அவர் எடிட் செய்து வெளியிட்டுள்ள இந்த நூல்

மொழிபெயர்ப்பைப் பற்றிய தமது அனுபவங்களை பதிவு செய்கையில் திலீப்குமார்
...நாட்டுப்புறவியல் அறிஞரும் மொழிபெயர்ப்பாளருமான திரு.ஏ.கே.ராமானுஜன் அவர்கள் ஒரு முறை என்னிடம் சொன்னதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். “இலக்கியப் படைப்புகளில் தலை சிறந்தது என்று எதையுமே அறுதியிட்டுக் கூற முடியாது. குறைந்தபட்சக் குறைகள் உடையது என்று மட்டுமே அதை வரையறுக்க முடியும்.” இக்கூற்று இலக்கியப் படைப்புகளை விடவும் மொழிபெயர்ப்புகளுக்கே அதிகம் பொருந்தும்.

-என்று தமது கதா வெளியிட்ட நூல் முன்னுரையில் கூறும்போது திலீப்குமார் 60-கள் வரை தமிழில் பிறநாட்டு இலக்கியப்
படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்ட அளவு, இந்திய மொழிப் படைப்புகள் மொழி பெயர்க்கப்படவில்லை.
அவற்றிலும் நேரடியான மொழிபெயர்ப்புகள் குறைவு. சாகித்ய அகாதெமி, தேசிய புத்தகக் கழகம்
இந்த இரு அமைப்புகளும் கடந்த 30,40 ஆண்டுகளில் நிறைய இந்திய மொழிப் படைப்புகளை மொழிபெயர்த்து
வெளியிட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது இந்தி வழியாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில், நூல்களை வெளியிடும் இந்த அமைப்புகள் நேரடியான மொழிபெயர்ப்புகளை
மட்டும் வெளியிடுவது என்று ஒரு கொள்கையைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. மேலும், கறாரான
மொழி அபிமானங்கள் கொண்ட நம்மிடையே, ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழியில் புலமையும்,
நுட்பமான இலக்கிய அறிவும் ஒருசேரப் பெற்றவர்களை இனம் காண்பது அரிது.
என்று குறிப்பிடும்போது ஒரு முக்கியத் தகவலை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
... இலக்கியம்,
மொழிபெயர்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கு சமூக மதிப்பு அறவே இல்லை. நம் பண்பாட்டுச் சூழலும்
கல்வியமைப்பும் கூட மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடியவையாக இல்லை.
இன்று மொழிபெயர்ப்பைப் பற்றிய புத்துணர்வு பெருகிவரும் சந்தர்ப்பத்தில் அவரது அனுபவ வாயிலான கூற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது இத்தடைகளை மீறி ஒரு இந்திய மொழியிலிருந்து மற்றொன்றுக்கு நேரடியாக மொழிபெயர்க்க வேண்டியது
பல வகையிலும் முக்கியமான ஒரு காரியம். படைப்பின் உயிரோட்டம், மொழியின் தனித்தன்மைகள்,
உருவங்கள் போன்று பல்வேறு அம்சங்களுக்கு உரிய நியாயத்தை நாம் வழங்க முடியும் என்பதோடு,
அதன் உண்மையான இலக்கிய மதிப்பையும் நிறுவ இது உதவும். இலக்கிய அனுபவம் தவிர, நம் இலக்கிய
வெளிப்பாட்டுத் திறன் குறித்தும் இதன் மூலம் நமக்கு புதிய விளக்கங்கள் கிடைக்கலாம்.
![]() |
| திலீப்குமார் 1979ல் |
நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பலரும் மொழி பெயர்ப்பில் அக்கறைக்
காட்டியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு என்பது வெகு பரிச்சயமான நடவடிக்கையாக இருந்து வந்துள்ளது.60-கள் வரை வங்கம், மராத்தி, இந்தி, ஐரோப்பிய,
ரஷ்ய மொழிகளிலிருந்து நிறைய மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளிவந்தன. சாகித்ய அகாதெமி,
தேசிய புத்தகக் கழகம் ஆகிய அரசு சார்ந்த நிறுவனங்களை விடவும், தனியார் பதிப்பகங்கள்
அப்போது மொழிபெயர்ப்புகளை வெளியிடுவதில் துடிப்பாக
இயங்கின. அன்று,
![]() |
| திலீப்குமார் அண்மையில்(2013) |
இந்த மொழிபெயர்ப்புகளுக்கு வாசகர்களிடையே அபரிதமான ஆதரவு இருந்தது
என்பதைவிடவும், அம்மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்ட, ஆங்கிலப் புலமையும், உலக நவீன இலக்கியப்
பிரக்ஞையும் கொண்ட நம் இலக்கியவாதிகளின் மும்முரமான முயற்சிகளே அவை வெளியாவதற்குக்
காரணமாக அமைந்தன. ரஷ்ய இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை அவை மார்க்சிய
கருத்துக்களைப் பரவலாக்கும் முயற்சியின் துணை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டன. என்றாலும்,
ரஷ்ய இலக்கிய மேதைகளின் படைப்புகள் வழி நமக்குக் கிடைத்த இலக்கிய அனுபவங்கள், அந்த
மொழிபெயர்ப்பு நடவடிக்கையின் மூல நோக்கத்தையும் கடந்து ஒரு விரிவான தளத்தில் நமது
இலக்கியத்தையும், இலக்கிய அறிவையும் வளப்படுத்தின. இன்று, நம்மிடையே வாழும் இரண்டாம்,
மூன்றாம் தலைமுறை நவீன தமிழ் எழுத்தாளர்கள் பலரும் மேற்குறித்த மொழிபெயர்ப்புகள் மூலம்
ஊக்கம் பெற்றவர்களே. இலக்கியம் அழகியல், இலக்கியத்தின் அரசியல் சார்பு இவை குறித்து
நமது வெகுவாக மாறிவிட்ட இன்றைய கண்ணோட்டம், முன்பு மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புகளையும்,
அவற்றின் இலக்கிய விளைவுகளையும் கடுமையாக மறு பரிசீலனை செய்யத் தூண்டும்தான். ஆனாலும்,
மொழிப்பெயர்ப்புகளுக்கான ஒரு மரபை அம்முயற்சிகள் நமக்கு உருவாக்கித் தந்துள்ளன -அவற்றின்
போதாமைகளையும் மீறி.
![]() |
| திலீப்குமாரின் மற்றொரு சாதனை பென்குயின் வெளியிட்ட 29 தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு |
60-கள் வரை தமிழில் பிறநாட்டு இலக்கியப்
படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்ட அளவு, இந்திய மொழிப் படைப்புகள் மொழி பெயர்க்கப்படவில்லை.
அவற்றிலும் நேரடியான மொழிபெயர்ப்புகள் குறைவு. சாகித்ய அகாதெமி, தேசிய புத்தகக் கழகம்
இந்த இரு அமைப்புகளும் கடந்த 30,40 ஆண்டுகளில் நிறைய இந்திய மொழிப் படைப்புகளை மொழிபெயர்த்து
வெளியிட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது இந்தி வழியாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில், நூல்களை வெளியிடும் இந்த அமைப்புகள் நேரடியான மொழிபெயர்ப்புகளை
மட்டும் வெளியிடுவது என்று ஒரு கொள்கையைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. மேலும், கறாரான
மொழி அபிமானங்கள் கொண்ட நம்மிடையே, ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழியில் புலமையும்,
நுட்பமான இலக்கிய அறிவும் ஒருசேரப் பெற்றவர்களை இனம் காண்பது அரிது. தவிர இலக்கியம்,
மொழிபெயர்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கு சமூக மதிப்பு அறவே இல்லை. நம் பண்பாட்டுச் சூழலும்
கல்வியமைப்பும் கூட மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடியவையாக இல்லை.
இத்தடைகளை மீறி ஒரு இந்திய மொழியிலிருந்து மற்றொன்றுக்கு நேரடியாக மொழிபெயர்க்க வேண்டியது
பல வகையிலும் முக்கியமான ஒரு காரியம். படைப்பின் உயிரோட்டம், மொழியின் தனித்தன்மைகள்,
உருவங்கள் போன்று பல்வேறு அம்சங்களுக்கு உரிய நியாயத்தை நாம் வழங்க முடியும் என்பதோடு,
அதன் உண்மையான இலக்கிய மதிப்பையும் நிறுவ இது உதவும். இலக்கிய அனுபவம் தவிர, நம் இலக்கிய
வெளிப்பாட்டுத் திறன் குறித்தும் இதன் மூலம் நமக்கு புதிய விளக்கங்கள் கிடைக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் நாங்கள் தெரிவு செய்திருந்த
இருமொழிகளான கன்னடம், வங்கம் ஆகியவற்றிலிருந்து முன்பே பல நேரிடையான கன்னடம், வங்கம்
ஆகியவற்றிலிருந்து முன்பே பல நேரிடையான மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளியாகியிருக்கின்றன.
த.நா.குமாரசுவாமி, த.நா, சேனாதிபதி, சு.கிருஷ்ணமூர்த்தி, டி.பி சித்தலிங்கய்யா ஆகியோர்
இவற்றைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இந்தப் பின்னணி எங்களுக்குத் தன்னம்பிக்கை
அளிப்பதாக இருந்தது என்றாலும் கூடவே அது ஒரு எச்சரிக்கை உணர்வையும் எங்களிடம் ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment