[திலீப்குமாரின் படைப்புப் பின்னணியிலூடே தவிர்க்க இயலாதவாறு ஒரு தத்துவப் பார்வை இருந்து வரும். இலக்கியமும் தத்துவமும் எதிரெதிர்க் கோணங்கள் என்ற கருத்து இருந்துவந்தாலும் இரண்டுமே ஒன்றை ஒன்று பாதிப்பதும் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றின் இருந்துவருவதும் உலக இலக்கியத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் நடை முறை தான். ஹோமரின் இலியது , மகாபாரதம், தமிழின் சிலப்பதிகாரம், மணிமேகலை, என்று ஒரு பட்டியலே கொடுக்கலாம். ஆழ்ந்த வாசகப் போக்கின் படி அணுகிப் பார்த்தால், தத்துவம் இல்லாமல் இலக்கியம் இல்லை. இலக்கியம் எடுத்து நிறுத்தினால் ஒழிய தத்துவத்திற்கே உயிரோட்டம் இல்லை என்று ஒரு முடிவுக்கு வரலாம்.. குறிப்பாக மௌனியைப் பற்றிய ஆய்வில் தெளிவாகப் புலப்படும். எல்லாத் தத்துவங்களையும் புறக்கணிக்கிற தத்துவம் கூட ஒரு தத்துவமாகிவிடுகிறது.]
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்குக் கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க ஒழுங்கும் இலக்கியத்தில் காணக்கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இலக்கியம் தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அரூவமான இரு உலகஙகள். ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த இரு உலகங்களும் வாழ்க்கையை விளக்கிக் கொள்ளவும், வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்குக் கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க ஒழுங்கும் இலக்கியத்தில் காணக்கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இலக்கியம் தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அரூவமான இரு உலகஙகள். ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த இரு உலகங்களும் வாழ்க்கையை விளக்கிக் கொள்ளவும், வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.
![]() |
| கிரியா பதிப்பகத் தோழர்களுடன் திலீப்குமார் [வலப்புறம் க்ரியா ராமகிருஷ்ணன்]1982 |
தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சுமூகப் பரிமாணம் உண்டு. மற்றவற்றை விட இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் உள்ள சமூகப் பரிமாணம் அதிகமானது. மேலும், தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துக்களில் சமூகப் பார்வையில்லை என்பதைவிட, மௌனியின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழ்ந்தது, நிகழ்கிறது என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு வெளிப்படையான யதார்த்த தளத்தில் நிகழ்வதை நாம் பார்க்கலாம். மௌனியின் எழுத்துக்கள் உள்ளார்ந்த மனம் சார்ந்த ஒரு தளத்தில் இயங்குகின்றன. புதுமைப்பித்தன் தன் எழுத்துக்களின் மூலம் சமூகத்தோடு கொள்கிற உறவு முழுமையானது அல்ல என்று கூட ஒரு மார்க்ஸியவாதி கருதக்கூடும். ஒரு வாசகருக்கும் அவ்வகை எண்ணங்கள் ஏற்படலாம். அதேபோல், மௌனி தன் எழுத்துக்கள் மூலம் கொண்டிருந்த சமூக உறவு முழுமையானதா அல்லவா என்று பரிசீலிக்கப்பட வேண்டும். குறிப்பாக மார்க்ஸீயவாதிகள் அவர் சமூகப் பார்வையற்றவர் என்று ஒரேடியாக அவரைப் பகிஷ்கரித்துள்ளனர்.
![]() |
| நண்பர் சீனிவாசனுடன் 1989ல் |
மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும் நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை. மௌனிக்கு அத்வைத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசங்களை நாம் அவரது கதைகளில் காண முடியும். [மீண்டும் பழைய பதிவு ஒன்றைத் திருப்பி நினைவுறுத்துவது மௌனி போன்றே தி.குவும் தத்துவ தரிசனத்தில் இருந்து முற்றாக விடுபடுவர் அல்ல என்று காணவே]சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஒரு எக்ஸிஸ்டன்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார். இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும். மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசங்கள் ஒரு பிரக்ஞை பூர்வமான திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல. அனுபவங்களின் வெளிப்பாட்டின்போது தெறித்து விழும் பார்வைத்துணுக்குகளவை உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவப்போக்கிலும் ஐக்கியம் கொள்ளவைக்க முடியாது. மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. இவற்றில் முழுமை காண முயல்பது அவ்வளவு சரியாக இராது. மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்து கொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை. எந்த வகையான தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுததுவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் காண்கிறார். தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை. வாழ்க்கைக்குத் தத்துவம் தரும் நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியடிக்க நினைத்தார். தவிர, அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில் எழுந்தவை. தம் சிறுகதைகளின் வடிவத்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. மௌனி முதன்மையாக ஒரு கலைஞர்.
மேலும் மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது ஒன்றை நாம் அவரது எல்லாக் கதைகளிலும் காணமுடியும். மௌனியின் கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒர தீவிரமான பிரக்ஞை நிலையில் சஞ்சரிப்பவர்களாவே இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதமும் தீவிரமான பிரக்ஞை நிலையில் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பிற்றிச் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டு விடுகிறான். அவனுக்குத் தத்துவப்பரிச்சயமோ படிப்போ இல்லாத போதும்கூட, மரணம், காதல், போன்ற போன்ற உளவியல் விளைவுகள், பரிமாணங்கள் மிகுந்த அனுபவங்களில் மனிதன் ஆழ்ந்து தீவிரமான பிரக்ஞை கொள்ளும் போது அந்நிலை அவன் பேச்சையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது. மௌனியின் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது. மௌனியின் பாத்திரங்கள் இவ்வகை அனுபவங்களைக் கொண்டவர்களாகவும், இத்தகைய பாதிப்பை ஏற்றவர்களாகவும் உள்ளார்கள். ஏற்கெனவே கூறியது போல மௌனி கதைகளின் முக்கிய அனுபவங்களும் உறவியல் பரிமாணங்கள் மிகுந்த மரணம், ஆண், பெண் உறவு. வாழ்வின் நிச்சயமின்மை போன்றவையே. மௌனிக்கு மனித அனுபவங்களின் புறவிளைவுகளில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. ஒரு அனுபவம் மனிதனிடம் ஏற்படுத்தும் உளவியல் விளைவுகளிலேயே அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகப் பல சமயம் அவரது பாத்திரங்களின் அனுபவங்கள், அதற்கு அவை காட்டும் எதிர்வினைகள் ஆகியவை விசித்திரமாகத் தோற்றம் தரக் கூடியவை. ”எங்கிருநதோ வந்தான்” என்ற அவர் கதையில் காணப்படும் பின்வரும் வரிகள்.
“.... நடுஇரவில் நான் விழித்துக்கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே படுத்திருந்தேனோ என்னவா? பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக் கொண்டிருந்தான்.... பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துச் சென்றது போலும்... என்னையே, என்னுடைய சவத்தையே நான் வெகுதூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு, வருத்தம், ஆத்திரம், ஒரு அருவருப்பு, ஒருங்கு கூடின... ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது... மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இறப்பு...? இறப்பு?... அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வரத்தை எட்டி எட்டி பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம் அவன் பாடிக்கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக்கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக கோடிட்டதுதானா நம் வாழ்க்கை...? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லைக் கடக்க அறியாது கடந்தது போம். கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக்கொண்டிருப்பதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் போலும் நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?”
மௌனி, மனித அனுபவங்களை, அநேகமாகத் தன் எல்லாக் கதைகளிலும் உள்ளார்ந்த மனமும் அறிவும் மட்டுமே சார்ந்த உளவியல் தளத்தில் நிகழ்த்திக்காட்டுகிறார். யதார்த்த உலகின் அம்சங்கள் அவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும் போது மட்டும் அற்புதமாகப் பிரகாசிப்பதையும், மற்ற சமயங்களில் மங்கலாகிப் போவதையும் காணலாம். இவ்வகையில் வாழ்க்கை அனுபவங்களின் உளவியல் பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆழமாக அலசிப் பார்க்கும் போது மௌனி அனுபவங்களின் புறத்தோற்றத்தின் இறுதிய தன்மையைத் தகர்த்து விடுகிறார். தவிர, தன் தனித்துவமான பார்வைகளை வழங்கி அந்த அனுபவங்களைப் புதிய ஒளியில் காட்டி வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.
[திலீப்குமார் படைத்துள்ள கதைகளில் காமம் ,மரணம் ஆகிய இருவகைத் தாக்கங்களில் மனித வாழ்வில் ஊடாடும் ஆன்ம அனுபவங்கள் தத்துவக் காற்று வீச்சில் அல்லாடுவது புலப்படும் ]
[திலீப்குமார் படைத்துள்ள கதைகளில் காமம் ,மரணம் ஆகிய இருவகைத் தாக்கங்களில் மனித வாழ்வில் ஊடாடும் ஆன்ம அனுபவங்கள் தத்துவக் காற்று வீச்சில் அல்லாடுவது புலப்படும் ]


No comments:
Post a Comment