நூற்றாண்டுகள் மெல்ல மெல்லத்தான் நகர்ந்து செல்கின்றன. கதாசிரியரின் காலயந்திரம் ஒரு அதிசயோக்தி வேகத்தில் ஒரே சிறுகதைக்குள் மூன்று நான்கு நூற்றாண்டுகளை சிறு வீச்சில் கடக்கிறது. அதைக் கணக்கெடுத்தும் பார்க்கிறது .ரமா-உமா சிறுகதையில் திலீப்குமார் அதைச் சுட்டிக்காட்டுகிறார். அதில் கதைசொல்லி பாத்திரத்தில் திலீப்குமாரே வருகிறார் அந்தக் கதாபாத்திரங்கள் இருவரிடமும் சொல்கிறார்
"வெளி உலகக் காலக் கணக்குப்படி, இந்த கதைநிகழ்வது 16 மணி நேரம்தான். கதைக்கு வெளியே இருக்கும் காலத்திற்கும் கதைக்குள்செயல்படும் காலத்திற்கும் பெரிய தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கதைக்குள் காலம் சில சமயம் நெடுக்கிலும் சில சமயம் குறுக்கிலும் பயணிக்கும். டேனிஷ் கோட்டையில் 400 வருடங்கள் புதிய ஜெருசலம் தேவாலயத்தில் 300 வருடங்கள், இந்தக் கடற்கரையோர விடுதியில் 200 வருடங்கள், உங்கள் இருவரில் 40+40=80வருடங்கள், … இப்படி காலம் எல்லாவற்றுக்குள்ளும் பொதிந்து கிடக்கிறது. நீங்கள் மௌனமாக இருக்கும்போது அது குறுக்கிலும் , பேசும் போது நெடுக்கிலும் போகிறது. வேறு விதமாகச் சொல்வதானால், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட முக்கோணங்களின் வழியாகத்தான் நீங்கள் இந்தக் கதையில் பயணிக்கிறீர்கள்"
அப்படி பாத்திரங்களோடு சேர்த்து நம்மையும் பயணம் செய்வித்து திலீப்குமார் ரமா-உமா என்ற ஒரே சிறுகதை மூலம் உருவம் ,உள்ளடக்கம்,உணர்வுகளை வாய்விட்டும் மௌனமாகவும் ஒரு தனி சாதனையைப் பதிவு செய்கிறார். மொழிநடையில் அபூர்வமான தேர்ச்சியும் வாசகரை ஆற்றுவெள்ளத்தில் ஆயாசப் படாமல் மிதக்க வைத்து ஈர்த்துச் செல்லும் தொழில் நுணுக்கமும் இக்கதையில் வெளிப்படுகின்றன. திலீப்குமார் பெயர் சொல்ல இந்த ஒரே சிறுகதை போதும்
என் வாசக அனுபவத்தில் நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ முத்திரை குத்திக் கொண்டு வெளிவந்த படைப்புக்களில் இது முன்வரிசையின் முன்னணியில் நிற்கிறது.
மூங்கில் குருத்து என்ற யதார்த்த இலக்கியப்பாதையில் சென்று நவீனத்துவப் படைப்பு ஒன்றை நமக்குத் தந்த திலீப்குமார் இதே சிறுகதையில் புதிதாக எழுத வருகிறவருக்கும், ஏற்கெனவே எழுதிக்கொண்டிருப்பவர் களுக்கும் பாத்திரங்களோடு கதாசிரியர் உரையாடுகிற போக்கில் அறிவுரை வழங்குகிறார்.

"இப்போது போய் யாராவது ஒரு யதார்த்த இலக்கிய கதையை எழுதுவார்களா? எழுதினால், காறித்துப்பிவிடுவார்கள். உங்களுக்கு தெரியாது. தொண்ணூறுகளுக்குப் பின் இலக்கிய நிலவரமே மாறிவிட்டது. தலித் எழுத்தாளர்கள் கதைகள் எழுத ஆரம்பித்த பின் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்க, நடுத்தர சாதி எழுத்தாளர்களின் சாயம் முற்றிலுமாக வெளுத்துவிட்டது. இது ஒரு நெருக்கடியான நேரம். 60/70 களில் கூட இந்திய இலக்கியத்திற்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, இந்தியப் பாத்திரங்கள் ஏதோ இரண்டாம் உலகப் போரில் வதை பட்டு திரும்பியவர்கள் போல் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு, இருளிலும் மௌனத்திலும் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
நல்ல வேளை, நாங்கள் ஐரோப்பாவிலிருந்து கரீபியனுக்கு ஏற்கனவே நகரத் தொடங்கிவிட்டிருந்தோம். அதோடு, வாராது வந்த மாமணி போல்,
மார்க்குவேஸ்ஸூம் அப்போது வந்து சேர்ந்தார். அதன் பின்தான் நாங்கள் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது. மாயம், மந்திரம், என்று ஜரூராக களத்தில் இறங்கிவிட்டோம். அப்போது எங்கள் பாத்திரங்கள் ராமேஸ்வரம் கடற்கரையில் லத்தீன் அமெரிக்கர்களைப் போல் சிந்தித்துக் கொண்டு அலைந்ததையும் கூட மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். யார் கண் பட்டதோ? இப்போது அதுவும் அலுத்துப் போய்விட்டது. நாங்கள் என்னதான் செய்வது? மறுபடியும் நெருக்கடிதான். இந்த உலகமயமாக்கல் வேறு பாடாய் படுத்துகிறது. எங்கள் அரசியல் பார்வைகளை எல்லாம் இது முற்றிலும் காலி செய்துவிட்டது."
![]() |
| மார்க்குவேஸ் |
இதை அறிவுரை என்று எடுத்துக்கொள்வதும் திலீப்குமாரின் சொந்த அபிப்பிராயம் என்று எடுத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்.
இத்துடன் கூடவே எழுத்தாளருக்குள்ள ஒரு சங்கடத்தையும் திலீப்குமார் சுட்டிக் காட்டாத தவறவில்லை.
"ஒரு கதையை துவக்குவது எளிது; முடிப்பது தான் சிரமம். தவிர பாத்திரங்கள் எழுத்தாளனை கைவிடுவதற்கு முன் எழுத்தாளன் அவர்களை கைவிட்டு விடவேண்டும். உலகின் எல்லா கதைகளும் இவ்வாறு யாரோ ஒருவரால், ஏதோ ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டவைதான். கதைகள் நன்றாக இருப்பதற்கும் மோசமாக இருப்பதற்கும் இதுதான் காரணம். நல்ல கதைகள் எல்லாம் உரிய நேரத்தில் எழுத்தாளர்களால் கைவிடப்பட்டவைதான். கதைகள் நன்றாக இருப்பதற்கும் மோசமாக இருப்பதற்கும் இதுதான் காரணம். நல்ல கதைகள் எல்லாம் உரிய நேரத்தில் எழுத்தாளர்களால் கைவிடப்பட்டவையே"

ரமா-உமா சிறுகதையில் வெகு நாசூக்காக இலக்கியத்தின் கடமை என்ன என்று பாத்திரங்களையே கேள்விகேட்டுப் பேசவைக்கிறார்.
"இவ்வளவு மெனக்கெட்டு இந்தக் கதையை எழுதி என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?
"இவ்வளவு மெனக்கெட்டு இந்தக் கதையை எழுதி என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?
க.சொ: இலக்கியத்தால் ஒன்றும் சாதித்துவிட முடியாது.
ரமா/உமா: பின் எதற்காக இந்த அவஸ்தை?
க.சொ: அதற்காக சும்மாவே இருந்துவிட முடியுமா? நாய் என்றால் நக்கத்தான் வேண்டும்; எழுத்தாளன் என்றால் எழுதத்தான் வேண்டும்!
ரமா/உமா: இந்த கதைகயில் அப்படி என்ன நீங்கள் பெரிதாக சொல்லிவிட்டீர்கள். ஒன்றுமே இல்லை. நன்றாக இருந்த எங்களை ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற்றி, பைத்தியம் போல் பேச வைத்திருக்கிறீர்கள். அவ்வளவு தானே? நாங்கள் கேட்கிறோம் ஓரினச்சேர்க்கையாளர்கள் யாராவது வந்து உங்கள் வீட்டுவாசலில் ஆர்ப் பாட்டம் செய்தார்களா எங்களுக்கு ஆ தரவாகக் கதை எழுது என்று?
க.சொ: அப்படி யாரும் செய்யாவிட்டாலும் எனக்கென்று ஒரு சமூகக் கடமை இருக்கிறதல்லவா? பெண்கள் மீதும் பெண்களின் வாழ்க்கை மீதும் என் அக்கறையை வெளிப்படுத்தியது தவறா என்ன?
ரமா/உமா: என்ன ஒரு பாசாங்கு! நியாயமாகப் பார்த்தால் இந்தக் கதையை நீங்கள் எழுதியிருக்கக் கூடாது. ஒரு பெண் எழுத்தாளர் தான் இதை செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக் கொண்டீர்கள்.
க.சொ: வாஸ்தவம் தான். ஆனால் இந்தக் கதையை அவர்கள் எழுதியிருக்க முடியாது. வேறு கதையைத்தான் எழுதியிருக்க முடியும். அது இதைவிடவும் நன்றாக அமைந்து விடவும் கூடும். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. கதை முடியும் இந்த நேரத்தில் அதைப் பற்றி பேசிப் பயனில்லை. எழுதியது எழுதியாகி விட்டது."

No comments:
Post a Comment