. திலீப்குமார் மௌனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியச் சிந்தனை எழுத்தாளர் கண்ணோட்டம் பற்றி எழுதும் முன்பே சில சிறு பத்திரிகைகளில் தம் தனித்தன்மையை நிலைநாட்டும் படைப்புக்களை வெளியிட்டிருந்தார். எனினும் ''மௌனியுடன் கொஞ்ச தூரம்" நூல் மூலமே நவீனத் தமிழ் இலக்கிய உலகின் தனித்த கண்ணோட்டத்திற்குப் பாத்திரமானார்.
ஒரு படைப்பிலக்கியவாதியின் இலக்கியத் தரமும், மொழித்தேர்ச்சியும் மற்றொரு படைப்பிலக்கியவாதியைக் கணக்கிடுவது அல்லது கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலம் எளிதில் வெளிப்பட்டு விடும். இனம் இனத்தையே சாரும் என்ற முது மொழிப்படி. இந்த இனம் என்ற சொல்லுக்கு அறிவாளிகள் சரியான அர்த்தமே எடுத்துக்கொள்வர் என்று இனப்பிரச்சினை தலை விரித்தாடும் இந்த காலகட்டத்தில் சொல்லவேண்டி வருகிறது
திலீப் குமார் மௌனியை வரையறுக்கிறார் "மௌனி ரொம்பவும் குறுகிய ஒரு வட்டத்திற்கான எழுத்தாளராகச் சுருங்கியிருப்பினும், அவரிடமும் நான் மேற்குறித்த அறவாரியான தத்துவச் சார்புகளையும், மேலேழுந்த வாரியான அழகியல் உணர்வுகளையும் தாண்டி வந்துநாம் பார்க்கும் பொழுதே மௌனிக்குரிய மதிப்பை நம்மால் அளிக்க முடியும்.

![]() |
| மௌனி |
--ஒரு வகையில் மௌனி முன்னோடியற்றவர் தான். ஆனால் மௌனிக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் பெரிதும் அவர் தமிழ் சிறுகதை வளர்ச்சியின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயல்பட நேர்ந்ததால்தான். மௌனியைப் பொறுத்தவரை, மௌனிக்கு, அவர் முன்னோடியற்றவர் என்ற பெருமையை விட அவர் பின்னோடியற்றவர் என்ற உண்மைதான் நமக்கு முக்கியமானது. புதுமைப்பித்தனுக்கு ஒரு சுந்தர ராமசாமி, ஒரு ஜெயகாந்தன் போல, கு.ப.ராவுக்கு
[கு.ப.ரா. சொன்னார்: ``ஸெக்ஸ் என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அது மானிட உணர்ச்சியின் அடிப்படை அம்சம்; மனக்கடலின் ஆழத்தில் _ அடித்தளத்தில் பொதிந்து கிடக்கும் முதல் உணர்ச்சி’’.]
ஒரு தி.ஜானகிராமன் போல மௌனிக்கென்று ஒருவரை நம்மால் கூற முடியாது.
மௌனியின் சாதனையும், தோல்வியும் இந்த பண்பல்தான் உள்ளது. புதுமைப்பித்தன் கு.ப.ரா. ஆகியோர்களது இயக்கம், ஒரு வாசகர் கூட்டத்தை தவிர, ஒரு சுந்தர ராமசாமியையும், ஒரு ஜெயகாந்தனையும், ஒரு ஜானகிராமனையும் உருவாக்கியது. ஆனால் மௌனியின் இயக்கம் தன் குறுகிய அளவிலேயே முழுமை கண்டு பின்னால் வந்த பலருக்கும் ஒரு ஆய்வுப் பொருளாக, ஒரு புதிராக மட்டுமே முடிவடைந்தது. பின்பற்ற முடியாத கலைச் செயல்பாட்டில் சமமான அளவு பாதகங்களும், சாதகங்களும் உள்ளன. அதன் விளைவுகளைத்தான் மௌனி இன்றும் அனுபவித்து வருகிறார். இந்த அடிப்படையில் மௌனியைப் பற்றி புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற திருமூலர் ஒப்புமைக் கூற்றுக்கு சாதகமாகவும, பாதகமாகவும் விளக்கம் கூறலாம். ஆனால் இத்தகயை சர்ச்சைகள் நமக்கு இந்த சந்தர்ப்பத்தில் முடிவான பயன்களை தரக்கூடியவை அல்ல. ஒரு வகையில் மௌனி முன்னோடியற்றவர்தான். இருப்பினும் இந்தக் கூற்றின் சிறப்பை நாம் காலப்போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகி விடும் என்றே தோன்றுகிறது.
[கு.ப.ரா. சொன்னார்: ``ஸெக்ஸ் என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அது மானிட உணர்ச்சியின் அடிப்படை அம்சம்; மனக்கடலின் ஆழத்தில் _ அடித்தளத்தில் பொதிந்து கிடக்கும் முதல் உணர்ச்சி’’.]
ஒரு தி.ஜானகிராமன் போல மௌனிக்கென்று ஒருவரை நம்மால் கூற முடியாது.
![]() |
| தி.ஜானகிராமன் |
[-திலீப்குமாரின் இந்தக் கூற்று மிகவும் நெகிழ்நிலை [elastic] தன்மை கொண்டது .பளிச்சென்று ஒரு கருத்து வெளிப்பாடாக இல்லாமல் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்ற ரீதியில் அமைந்தது.எனினும் எந்த ஒரு முன்னோடிக்கும் ஒரு முன்னோடி அமைவது துர்லபம்.திருவள்ளுவர் விஷயத்திலேயே கூட அப்படி குறள் வடிவில் கருத்துக்களை, உவமைகளோடும்,சொற்செட்டோடும் சொன்ன ஒருவர் இருந்த விவரம் நமக்கு கிடைக்கவில்லை.
திருமூலரை உதாரணம் காட்டின புதுமைப் பித்தனுக்கோ, ஏன் திருமூலருக்கோ கூட ஒரு முன்னோடி இல்லை. எனவே இந்த முன்னோடி பின்னோடி பிரச்சினை காலங்காலமாக பதில் கூறப்படாமல் இருந்து வருவது.]
---திலீப்குமார்.. என்னைப் பொறுத்தவரையில், ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தின் வரையரைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக அவன் இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இக்கூறுகளின் மிகுதியோ குறைவோ அவனை விசேஷமாகப் பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன். ... என்னதான் படைப்பாளியின் இமையருகே சென்று பார்த்தாலும் தான் படைப்பாளியின் கோணத்தில் உலகைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்தவனாக அவன் இருப்பான். அதேபோல், படைப்பாளியின் கோணத்திலிருந்து காட்டப்படும் உலகமே சர்வ நிச்சயமானது என்று ஆவேசம் கொண்டோ, சுருங்கியோவிடமாட்டான். அவன் ஒவ்வொரு படைப்பாளிக்கும் (அப்படைப்பாளியின்) அவனது கலைமட்டத்திற்கும் ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக்கொண்டே வாசிப்பதில் ஆழ்கிறான்.
![]() |
| திலீப்குமார், சுந்தர ராமசாமி, மற்றும் கி.அ.சச்சிதானந்தம் |
இன்று நம்மிடையே அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கந்தசாமி, நகுலன், பூமணி, வண்ணதாசன், வண்ண நிலவன் போன்ற பல எழுத்தாளர்கள் , வண்ண நிலவன் போன்ற பல எழுத்தாளர்கள் இயங்குவதைப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளை நாம் அணுகும்போதும் வெவ்வேறு விதமாகத்தான் அணுக வேண்டியுள்ளது. நாம் அவ்வாறே அணுகிக் கொண்டிருக்கிறோம். வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பலவிதமான எதிரெதிர் பரிமாணங்களைக்காட்டும் எழுத்தாளர்களை வெகு இயல்பாகவே உலகெங்கும் வாசகர்கள் ஏற்று வந்திருக்கிறார்கள். ஜி.நாகராஜன் போன்ற ஒரு எழுத்தாளரையும், அசோகமித்திரன் போன்ற ஒரு எழுத்தாளரையும் நம்மால் சிரமமின்றி ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மதிப்பளிக்கவும் முடிகிறது. இதேபோல், ஒரே தத்துவசார்புள்ள இரு எழுத்தாளர்களிடையேயும் கணிசமான வித்தியாசங்கள் இருப்பதை நாம் அறிவோம். மார்க்ஸியவாதிகள் மதிக்கும் இரு எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ், மார்க்ஸிம் கோர்க்கி ஆகிய இருவரின் எழுத்துக்களில் காணப்படும் வித்தியாசங்களும் அழகுகளும், ரொம்பவும் நுட்பமானவை. இவற்றையும் நாம் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறோம்.மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, மேலே சொன்ன வகையிலேதான் அவற்றை கணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது
மௌனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, இரு மனிதர்களுக்கிடையேயான உறவில் இருக்கும் தனித்தன்மைகளும் அவற்றின் விளைவுகளாக ஏற்படும் அதிருப்தி, தோல்வி, மரணம், பயணம் ஆகியவை. இந்த அனுபவங்கள் மௌனியின் கதைகளில் ஆண், பெண் உறவு என்ற அடித்தளத்தின் மீது நிறுவப்பட்டு வெளிப்படுத்தப்படுபவை. அநேகமாக மௌனியின் எல்லாக் கதைகளிலும் காதலில் தோல்வியுற்ற, நுண்ணுணர்வு மிக்க ஒரு வேதாந்தியின் எட்டிய வெளியை நோக்கிய சஞ்சாரத்தைப் பார்க்க முடியும். கதையம்சம் என்ற அளவில் நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடிய காதல் என்ற அனுபவமே எல்லாக் கதைகளிலும் காணப்பட்டாலும் அந்த அனுபவத்தின் உந்துதலில் மௌனியின் பாத்திரங்கள் கொள்ளும் விகசிப்பு, ஒரு குறிப்பட்ட உணர்வுத் தளத்திலிருந்து மனித வாழ்க்கையின் அடிப்படையான பல பரச்சினைகளையும், நிலைகளையும் நோக்கி விரிகின்றது என்பதால் அவற்றை நாம் பொருட்படுத்தியே தீர வேண்டியுள்ளது.
[இந்த திலீப் குமார்-இலக்கிய அணுகுமுறை, பரந்த மனப்பான்மையோடு மிட்டு மாமா காட்டும் சிற்றுண்டி சாலைகள் குறித்த, ரசனையோடு கூடிய தீவிர விருப்பு வெறுப்பற்ற ரசனை, எந்த ஒரு வாசகனும் பெறவேண்டியது என்று நான் கருதுகிறேன். லோகோபின்ன ருசி என்ற பர்த்ருஹரி கூற்றையும் நூறு பூக்கள் பூக்கட்டும் என்று மாசேதுங் சொன்னதையும் நான் நினைத்துக்கொள்கிறேன் ]
அவ்வளவு எளிதில் தன் கதைகள் வாயிலாக மௌனி கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்றே கூறலாம். வாழ்க்கையின் பல விஷயங்களைப்பற்றி மௌனியின் தத்துவார்த்த விளக்கங்கள் எந்த விதமான பொதுத்தர்க்க நியதிக்கும் உட்பட்டவையல்ல. ஏனெனில், அவரது அனுபவங்களின் தன்மைகள், அவற்றின் பாதிப்பை ஏற்றுக் கொள்ளும் அவரது பக்குவம், அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள், அவை தோற்றம் கொள்ளும் மனநிலை, காலம், இவ்வெண்ணங்களை வெளிப்படுத் அவர் கைக்கொள்ளும் பல பரிமாணங்கள் கொண்ட இலக்கிய வடிவம் இவையெல்லாம் அவரது விளக்கங்களை ஒரு பொது விதிக்கப்பால் இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை அவர், மனம் நொடிந்து போகும்படியும், குதர்க்கமாகவும், விசித்திரமான மனக் கோணங்களிலிருந்தும் அளிப்பதாகத் தோன்றுவதற்கும் மேற்சொன்ன கூற்றிலிருந்தே விடை பெறமுடியும்.
. மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும் நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை. மௌனிக்கு அத்வைத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசங்களை நாம் அவரது கதைகளில் காண முடியும் என்று கூர்மையாக மௌனியை அணுகிய , மௌனி போலவே மிகக் குறைவான கதைகளை குறிப்பிட்ட அளவில் பாலுணர்வு கலந்த கதைகளை எழுதிய திலீப்குமாரிடமும் அவரது படைப்புக்களின் ஆழத்தில் நடுநரம்பு போல் தத்துவ அம்சம் அதிகம் இருப்பதைக் காணலாம்.
சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஒரு எக்ஸிஸ்டன்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார். இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும். மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசங்கள் ஒரு பிரக்ஞை பூர்வமான திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல. அனுபவங்களின் வெளிப்பாட்டின்போது தெறித்து விழும் பார்வைத்துணுக்குகளவை. உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பட்ட தத்துவப்போக்கிலும் ஐக்கியம் கொள்ளவைக்க முடியாது. மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. இவற்றில் முழுமை காண முயல்வது அவ்வளவு சரியாக இராது. மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்து கொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை. எந்த வகையான தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுததுவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் காண்கிறார். தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை. வாழ்க்கைக்குத் தத்துவம் தரும் நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியடிக்க நினைத்தார்.
தவிர, அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில் எழுந்தவை. தம் சிறுகதைகளின் வடிவத்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. மௌனி முதன்மையாக ஒரு கலைஞர்.
[இந்தப் பார்வையில் மௌனியின் சிறந்த வாசகராக திலீப் குமார் வெளிப்படுவதை நான் காண்கிறேன்.]

No comments:
Post a Comment