[தமிழில் உரைநடை அடிக்கடி மாறுதலுக்கு ஆட்பட்டிருப்பதை எல்லாரும் அறிவர். இது சங்க காலத்திலிருந்து [அப்படி ஒன்று அக்காலத்தில் கிடையாது என்று வாதிக்கும் அறிஞர்கள் தொல்காப்பியத்திலேயேவும் , அதற்கு உரை எழுதிய பல புலவர் பெருமக்களிடையேயும் , சான்றுகள் காணலாம்.] வள்ளலார், மகாகவி பாரதி , அண்ணாதுரை, கருணாநிதி ,ஜெயகாந்தன் ஆகியோர் உரைநடையில் பல பரிசோதனை முயற்சிகள் செய்துள்ளதும் அனைவரும் அறிந்த செய்தி தான்.
ஆனால் 1980களின் பிற்பகுதியில் உணர்வுபூர்வமாக, அதாவது அறிந்து உணர்ந்தே செய்யப்பட்ட உரைநடையில் பரிசோதனை முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்மொழியின் வாக்கிய அமைப்பு, சொற்பிரயோகங்கள், ஒலிக்குறிகள் கொண்டு உணர்வுகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் முறை, சுருங்கச் சொல்லும் உத்தி எனப் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஜனரஞ்சக ரீதியாக சுஜாதா இதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளதை தமிழ் உரைநடை வளர்ச்சி பால் கண்ணோட்டம் செலுத்தி வருவோர் மறுக்க இயலாது. அப்படி சுஜாதா என்ன சாதித்தார் என்பதை விளக்குவது தற்சமயம், திலீப்குமார் பற்றிய முழுக்கண்ணோட்டம் தரும் தற்போதைய முயற்சிக்குப் பொருந்தாது.

எண்பதுகளின் பிற்பகுதியில், தமிழில் முயற்சி செய்யப்பட்ட Non – linear எழுத்துக்களின் சந்தர்ப்பத்தில் உரை நடையில் பரிசோதனை முயற்சிகள் பற்றி சிந்திப்பது சற்று பொருத்தமான விஷயம்தான். எதார்த்தவாத இலக்கியத்தின் பல அம்சங்களை துறந்துவிட்டதான ஓர் எண்ணம் மேற்குறித்த Non-linear முயற்சிகளை படிக்கும் போது நமக்கு கிட்டும். இந்தக் கதைகள் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய விளைவுகளை பற்றி அக்கறைக் கொள்ளும் முன் பரிசோதனை முயற்சிகளின் ஆதார பின்னணி பற்றியும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.
உலக அரங்கில், பரிசோதனை முயற்சிகளுக்கு, கவிதைக்கு நிகரான விரிந்த தளமாக உரை நடையும் கடந்த 40,50 ஆண்டுகளில் வளர்ச்சியுற்று வந்துள்ளது. இது சாத்தியமாவதற்குரிய ஒரு அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடி, நம் சமகால வாழ்க்கையில், முன்னெப் போதையும் விடவும் கூர்மையாக, தோன்றியுள்ளது. 2வது உலக போருக்கு பின்பான உரைநடை இலக்கியத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சிகள் இக்கருத்தையே ஊர்ஜிதம் செய்கின்றன.
2வது உலகப் போருக்கு பின்பான உடனடியான எழுத்துக்களில் மனித நேயம் வலியுறுத்தப்பட்டது என்றால், இன்று வாழ்க்கையின் நிச்சயமின்மை, இறுக்கம் வன்முறை மரணம் ஆகிய அம்சங்களே பெரும்பாலான இலக்கியங்களின் விஷயங்களாக உள்ளன.
கலை படைப்புகளில் வடிவ, உள்ளடக்க ரீதியான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வது என்பது மிகவும் இயல்பான ஓர் அம்சம். இந்த நூற்றாண்டில், நுண்கலைகளில் இத்தைய பரிசோதனைகள் ஒரு உச்ச கட்டத்தையே அடைந்தன என்பதை நாம் அறிவோம். தன் அறிவு, முதிர்ச்சி இவற்றின் துணைகொண்டு, வாழ்க்கையை ஒரு எழுத்தாளன் எந்த தளத்தில் எதிர் கொள்ள விழைகிறானோ அதற்கேற்ற ஒரு புதிய இலக்கிய உருவை அவன் கைக் கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் பரிசோதனை முயற்சிகளுக்கான தர்க்க ரீதியான நியாயம் எழுத்தாளனின் ஆற்றலை, ஆர்வத்தை மட்டுமல்லாமல் பிரச்சினைகளின் கடுமையையும் பெரிதும் சார்ந்துள்ளது. ஒரு பரிசோதனை முயற்சியின் வெற்றி தோல்வியையும் கூ ட அந்த அம்சங்களே நிர்ணயிக்கின்றன.
ஒரு புதிய இலக்கிய முயற்சியில் , சம்பிரதாயமான யதார்த்த இலக்கிய வடிவம் நிராகரிக்கப்படும்போது அது புதியதொரு இலக்கிய சாத்தியப்பாட்டை முன் வைக்கிறது என்பதை விடவும். நம் சமகால வாழ்க்கையைப் பற்றிய ஓர் உண்மையை புதிய கோணத்தில் விவாதிக்கிறது என்பதே முக்கியம். வாழ்க்கை அதன் மென்மையை இழக்கும்போது, இலக்கியமும் தன் சம்பிரதாயமான அழகையும் ருசிகரமான அம்சங்களையும் இழக்கத்தான் வேண்டும். இலக்கிய அனுபவம், இலக்கிய விமரிசனத்திற்கான அடிப்படைகள் வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், இலக்கிய ரீதியான பரிசோதனை முயற்சிகள் வாசகனை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும். எனினும், இலக்கியம் குறித்த இந்த புதிய விழிப்புணர்வின் நோக்கம், நிச்சயம் வாசகனை பரிகசிப்பது அல்ல என்று நான் நினைக்கிறேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பான பரிசோதனை முயற்சிகளில், அவை எழுப்பிய கேள்விகளையும் மீறி அவை பிரதிபலித்த கலக – உணர்வுகளையும் மீறி, அவற்றிற்கென்றொரு விமர்சன இலக்கும், வாழ்க்கையின் ஆதர்சங்கள் குறித்த ஒரு நப்பாசையும் இருந்தன. ஆனால், இன்று அதற்கான வாய்ப்புகள் இல்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு விமர்சன இலக்கு அல்ல, பல விமர்சன இலக்குகள் இன்று நம் முன் உள்ளன. பிரச்சினைகளின் பன் முக தோற்றத்தை எதிர் – கொள்ளத்தக்க ஒரு புதிய இலக்கிய பரிசோதனையை கைக்கொள்ள நமது சூழல் நம்மை நிர்ப் பந்திக்கிறது.
அதே சமயம், அடிப்படை மதிப்பீடுகள் என்ற எதுவும் இல்லாத நிலையில் லட்சிய கோட்பாடுகள் என்று எவற்றையும் சார்ந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்க்கையின் குழப்பங்களிலிருந்து நெருக்கடிகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் ஒரு கருவியாக இந்த இலக்கிய செயல்பாடு அமைந்து விடுகிறது என்பது ஒரு தற்செயலான நிகழ்வு. பரிசோதனை முயற்சிகளின் ஊற்றுக்கண்ணும் இதுதான்.
பரிசோதனை முயற்சிகள் என்று சொல்லும்போது அது பிரதானமாக உருவம் சார்ந்த ஒன்று என்ற அடிப்படையிலேயே நாம் இனங்கண்டு கொள்கிறோம். இது ஓரளவுதான் சரி என்று தோன்றுகிறது. எதார்த்த வடிவத்திலேயே, இதுவரை நாம் உணரத்தவறிய பல விஷயங்கள் பல எழுத்தாளர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்.
ஒரு சம்பிரதாயமான எதார்த்தப் படைப்பில் அதன் உருவப்பழைமையையும் மீறி நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பல விஷயங்களைப் பார்க்கமுடியும், அதைப் போலவே உருவப் புதுமைமிக்க படைப்புகளிலும் பல அடிப்படைத் தவறுகள் இருப்பதையும் நம்மால் உணர முடியும். உருவப் புதுமை மட்டுமே அதன் தரத்துக்கு உத்தரவாதமாகாது. ஜேம்ஸ் ஜாய்ஸை முன்னிட்டு டாஸ்டாவ்ஸ்கியை நாம் புறக்கணித்து விட முடியாது
.மேலும், கலைப் படைப்புகளில் உருவப் புதுமைகள் தோற்றங்கொள்ள ஒரு சமூகத்தின் கலாசார, சமூ அரசியல் பின்னணி, பல்வேறு கலைமுயற்சிகளின் பரிச்சயம் ஆகியவை சமமான முக்கியத்துவம் உள்ள காரணங்களாக உள்ளன. எதார்த்த வடிவத்தின் போதாமையைப் போலவே, பரிசோதனை முயற்சிகளின் உணர்ந்து சாத்தியக் கூறுகளின் எல்லைகளையும் நாம் உணர்ந்து செயல்படவேண்டும். விமர்சன விவாதங்களின் போது உருவம் உள்ளடக்கம் போன்ற பிரிவுகள் பத்தாம் பசலித்தனமாகத் தோன்றலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் மனதில் படைப்பு உருக்கொள்ளும் மனநிலையில் இவை முக்கியமான அம்சங்களாகவே இன்னும் உள்ளன.

![]() |
| ஜேம்ஸ் ஜாய்ஸ் |

| டாஸ்டாவ்ஸ்கி |
ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரை Linear, Non-Linear போன்ற அம்சங்களுக்கிடையே பெரிய அளவில், பாரதூரமான வேறுபாடுகள் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த இரண்டுமே பிரக்ஞை பூர்வமான செயல்பாடுகளின் விளைவுகள் தாம். ஒன்று மற்றதை விட சிறந்தது என்று கூறுவதற்கான அடிப்படைகளில் படைப்பு ரீதியான தர்க்கத்தில் தான் வேறுபாடுகள் உள்ளன. இந்தப் படைப்பு ரீதியான தர்க்கம் கூட படைப்பாளிக்கு படைப்பாளி, சூழலுக்கு சூழல் மாறுவதோடு குறிப்பிட்ட படைப்பாளியின் பக்குவத்தையும், அறிவு முதிர்ச்சியையும் பெரிதும் சார்ந்துள்ளது.
ஒரு நுட்பமான வாசகனைப் பொறுத்தவரை ஒரு கலைப் படைப்பு ஒரு முக்கியமான தயாரிப்பு (Product) என்ற அர்த்தத்தில் என்றுமே அனுபவமாவதில்லை. அது செயல்பாட்டின் தொடர்ச்சி நிலையாகவே (Process) அனுபவமாகிறது. அதாவது, ஒரு படைப்பு, எழுத்தாளன் முன்வைக்கும் வடிவத்திற்கு சம்பந்தமில்லாத வகையிலான உரைநடையின் பலி்வேறு பகுதிகளாக, வர்ணனைகளின் துணுக்குகளாக ஒரு கலவையான வடிவத்திலேயே அனுபவமாகிறது. இந்த உண்மையை கணக்கில் கொண்டால் படைப்பின் உருவம் என்பதற்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பொருளற்றதாகத் தோன்றும். கட்டவிழ்ப்பு முறை விமர்சனம் போன்ற ஒரு செயல்பாடு வாசக அனுபவத்தில் (கட்டவிழ்பு முறை விமர்சனத்தின் தர்க்க ஒழுங்குகள் இதில் காணப்படாவிட்டாலும்) நிகழ்கிறது. இதுவே அரசியல் சமூக இலக்கியம் குறித்த புதிய விழிப்புணர்வு கலைகளில் பிரதிபலிக்கப்படும் போது அவற்றை எளிதாக ஏற்றுக் கொள்ள வாசகனுக்கு உதவுகிறது.
ஆதிக்கத்திற்கான உறவுகள்
ஆதிக்கத்திற்கான உறவுகள்
தற்போதைய பரிசோதனை முயற்சிகளில் ஏறக்குறைய எல்லாமே, எல்லா உறவுகளும் அடிப்படையில் ஆதிக்கத்திற்கான உறவுகள் என்ற உண்மையிலிருந்தே உந்துதல் பெற்றுள்ளன என்று சொல்லலாம். எல்லா உறவுகளும் ஆதிக்க உறவுகள் என்று சொன்னாலும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த உறவுகளின் ஆதிக்கத்தின் தீவிரத்திலும் கடுமையிலும் அந்த நாட்டின் கலாச்சார, சமூக பொருளாதாரச் சூழலுக்கேற்ப வித்தியாசங்கள் உள்ளன. இந்த அடிப்படைகளை ஒட்டியே தமது இலக்கிய முயற்சிகளும் பரிசோதனை முயற்சிகளும் அமைய வேண்டும் என்று கருதுகிறேன். உதாரணமாக ஒரு அமெரிக்க எழுத்தாளர் தனது சூழலின் கலாசார சீரழிவையும் வன்முறையையும், பாலுறவு சார்ந்த பிரச்சனைகளையும் பிரதிபலிக்க தேர்ந்தெடுக்கும் வடிவப் பரிசோதனைகளிலிருந்து உந்துதல் பெற்று அவற்றை அப்படியே பிரதியெடுப்பது வெற்றியளிக்காது.
தவிர, பரிசோதனை முயற்சிகளின் நோக்கமே அது நிகழ்த்தப்படும் களத்தில் சில குறி்பபிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதுதான். எனவே, எந்தப் பரிசோதனை முயற்சியும் அது நிகழ்த்தப்படும் சூழலின் தன்மைகளிலிருந்து அந்நியப்பட்டுவிடாமல் பிணைந்தே இருக்க வேண்டும். பரிசோதனை முயற்சிகளில் முதன்மையாக தனிமனிதப் பிரச்சனைகள் மற்றும் தனித்துவம் மிகுந்த கோணத்திலான உள்நோக்கிய பார்வைகளே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. இத்தகைய படைப்புகளில் எதார்த்த வடிவ இலக்கியத்திற்குரிய இலக்கணம் புறக்கணிக்கப்படுகிறது.
இந்தப் புறக்கணிப்பு இரண்டு காரணங்களின் அடிப்படையில் நிகழ்கிறது. ஒன்று அமைப்புகளின் சீர்குலைவுக்கு எதிரான மற்றும் அந்த சீர்குலைவை எதிர்கொள்வதற்குரிய ஒரு குரலாக அந்த சீர்குலைவை எதிர்கொள்வதற்குரிய ஒரு குரலாக அது செயல்படும் என்பது. பரிசோதனை முயற்சிகளுக்கு எதார்த்த ரீதியான படைப்புகளுக்குரிய வடிவ ஒழுங்கு தேவையில்லை என்ற உண்மையோடு, பரிசோதனை முயற்சிகள் எழுத்தாளனுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை வழங்குகிறது என்பதையும் இணைத்துப் பார்த்தால் ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவிவிடுவது எளிதல்ல என்பது புலப்படும்.
கோணங்கி

கடந்த இரண்டு மூன்று வருடங்களில், தமிழில் சில்வியா, சாரு நிவேதிதா, கோணங்கி, அம்பை , கோபி கிருஷ்ணன் ஆகியோர் பல பரிசோதனை முயற்சிகளை சிறப்பாக செய்து பார்த்திருக்கிறார்கள் என்பது உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. என்றாலும் இம்முயற்சிகள் தொடர்பாக எழுந்துள்ள சாதக பாதகமான விமர்சனங்களில் காணப்படும் ஆவேசத்தை நியாயப்படுத்தும் வகையில் இப்படைப்புகள் இருக்கின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
![]() |
| அம்பை |
| கோபி கிருஷ்ணன் |
![]() |
| சாரு நிவேதிதா |

No comments:
Post a Comment