"ஒரு நல்ல கதை அல்லது இரண்டு எழுதிவிடும் எழுத்தாளர்கள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது, நான்காவது கதைகள் அவர்கள் எழுதுவது கிடையாது. அப்படியே எழுதினாலும் முதல் கதையில் காணப்பட்ட ஒளி வெறும் விபத்துதானோ என்று தோன்றிவிடுகிறது. திலீப் குமாரின் கதை ஆண்டுக்கு ஒன்றாவது படிக்கக் கிடைக்கிறது. ஒரு முறையும் ஏமாற்றம் ஏற்பட்டதில்லை.
இவ்வளவு சீரான தரத்தில் எழுதும் அவருடைய கதைகளில் ஒரு பொதுவான இழை, புனைகதைகளில் வெகு விரைவாகவும் எளிதிலும் தொய்வும் அலுப்பும் தட்டக்கூடியதுமான கீழ், மத்திய வர்க்க வறுமை வறுமை வாழ்க்கையின் ஒரு பிரத்யட்சமான அம்சம். வறுமை கொடிது. அதே நேரத்தில் மனிதனின் மாட்சிமையைத் தெரியக் கொணரும் மிகச் சில சூழ்நிலைகளில் வறுமை முக்கியமானதாகும். ஆனால் புனைகதைகளில் பொதுவாக வறுமையுடன் கூடவே ஒருவிதக் கழிவிரக்கமும் வெளியாகிப் பாத்திரம், வாசகர் இருவருடைய கண்ணியத்தையும் சுயமதிப்பையும் பாதித்துவிடுகிறது. திலீப் குமாரின் எழுத்தில் இவ்விஷயத்தில் சிறந்த கட்டுப்பாடு தெரிகிறது."
.."வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம். வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன. இவருடைய தீர்வு எனும் கதை 1977 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கதையாக சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருது பெற்றது. சிறுகதை எழுத்தாளனுக்குச் சிறுகதைத் தொகுப்பு அக்னிப் பரிட்சை மாதிரி. தனித்தனியாக வெவ்வேறு வெளியீடுகளில் படிப்பதற்கு ரசமாயிருந்தவை நூல் வடிவத்தில் தொகுப்பாகும் போது ஏமாற்றமளிக்கும் எடுத்துக்காட்டுகள் நிறைய உண்டு. திலீப் குமாரின் கதைகளைத் தொகுத்துப் படிக்கும் போது அவை சிறுகதை உருவத்துக்கு அப்பாற்பட்ட இலக்கிய அனுபவத்தைத் தருகின்றன. ஒரு கலைஞனால்தான் இதைச் சாத்தியமாக்க முடியும்.
ஆனால் ஒரு சம்பிரதாயக் கதைவார்ப்பிலேயே திலீப்குமார் கதை சொல்வதாக அசோகமித்திரனின் ஒரு மௌன நிராகரிப்பை என்னால் ஏற்கமுடியவில்லை
"திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை."
அவர் இன்னும் கொஞ்சம் பரந்த மனப்பான்மையோடு, கூறிய கவனத்தோடு திலீப்குமாரை வாசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒரு சோதனை எழுத்தாளர் என்ற முறையில் திலீப் குமார் சாதித்த வெற்றிகளுக்கு சான்று காட்ட மீண்டும் ரமா-உமா கதைக்கே நான் வரவேண்டி நேரிடுகிறது
....................................................
.."வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம். வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன. இவருடைய தீர்வு எனும் கதை 1977 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கதையாக சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருது பெற்றது. சிறுகதை எழுத்தாளனுக்குச் சிறுகதைத் தொகுப்பு அக்னிப் பரிட்சை மாதிரி. தனித்தனியாக வெவ்வேறு வெளியீடுகளில் படிப்பதற்கு ரசமாயிருந்தவை நூல் வடிவத்தில் தொகுப்பாகும் போது ஏமாற்றமளிக்கும் எடுத்துக்காட்டுகள் நிறைய உண்டு. திலீப் குமாரின் கதைகளைத் தொகுத்துப் படிக்கும் போது அவை சிறுகதை உருவத்துக்கு அப்பாற்பட்ட இலக்கிய அனுபவத்தைத் தருகின்றன. ஒரு கலைஞனால்தான் இதைச் சாத்தியமாக்க முடியும்.
"இன்று திலீப் குமாரின் சிறுகதைகளை ஒருசேரப் படிப்பவர்களுக்கு அவை வாழ்க்கைபற்றிய ஒருங்கிணைந்த பார்வை கொண்ட, தனித்துவம் வாய்ந்த கலைஞன் ஒருவனின் படைப்புகள் என்று சந்தேகமறத் தெரிந்துவிடும். நுணுக்கமான புறத் தகவல்களைக் கொண்டே புனையப்பட்ட அவருடைய கதைகளில் பல பாத்திரங்கள் கேலிக்குரியதாகவும் கண்டனத்துக்குரியதாகவும் படைக்கப்பட்டிருப்பதாக மேற்பூச்சுக்குத் தோன்றினாலும் வெகு இயல்பாக அவர்களின் போற்றத் தக்க பண்புகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச சமநிலைப் பார்வை திலீப் குமாருடைய படைப்புகளை வெறும் புனைகதையளவில் நிறுத்திவிடாமல் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரு தத்துவப் போக்கையும் வெளிப்படுத்துகிறது. இது எல்லா எழுத்தாளர்களுக்கும், அதுவும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு, சாத்தியம் ஆவதில்லை. நான் அவருடைய படைப்பு ஒன்றைச் சற்றுக் கவனமாகப் படிக்க நேர்ந்தது, சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னால். கதையின் தலைப்பு வம்பு. அன்று வெளியான எவ்வளவோ கதைகளில் அதில் எனக்கு ஒரு புதுக் குரலும் புதுப் பார்வையும் உணர நேர்ந்தது.
குஜராத்திகளை வைத்தே கதை எழுதுவது கொண்டு அனைவரும் மேலெழுந்தவாரியாக ஒரு முடிவுக்கு வரலாம். ஒரு கவர்ச்சிக்காக , ஓர் தமிழரல்லாத வேறான சமூகத்தினரை மையமாக்கிக் கதை எழுதினால், எளிதில் வாசகர் கவனம் ஈர்க்கலாம் ஆனால் திலீப்குமார் அந்த நோக்கோடு எழுதவில்லை. பார்த்ததை, நன்கு பரிச்சயப்பட்டதை எழுதும் தேர்வே அது.

இதை அசோகமித்திரனும் கவனித்திருக்கிறார்.
"திலீப் குமார் தமிழரல்லர். என்பது அவருடைய கதை மாந்தரிலிருந்து தெரிந்தாலும் இது இலக்கியத்துக்குப் புறம்பான கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தாய், மகன், சக ஊழியர்கள், எஜமானர், உறவினர்கள், ஒண்டுக்குடித்தனக்காரர்கள் அனைவருமே அந்த நிலையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இது வெறும் ஆற்றல் கொண்டு சாதித்துவிட கூடியதில்லை. ஆசிரியரின் இயல்பே மொழி, கலாச்சார வேறுபாடுகளின் அன்னியத்தனத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால்தான் அது எழுத்தில் வெளிப்பட முடியும். இத்தன்மை எந்த உன்னதக் கலைப் படைப்புக்கும் அடிப்படையாக இருந்திருக்கிறது."ஆனால் ஒரு சம்பிரதாயக் கதைவார்ப்பிலேயே திலீப்குமார் கதை சொல்வதாக அசோகமித்திரனின் ஒரு மௌன நிராகரிப்பை என்னால் ஏற்கமுடியவில்லை
"திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை."
அவர் இன்னும் கொஞ்சம் பரந்த மனப்பான்மையோடு, கூறிய கவனத்தோடு திலீப்குமாரை வாசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒரு சோதனை எழுத்தாளர் என்ற முறையில் திலீப் குமார் சாதித்த வெற்றிகளுக்கு சான்று காட்ட மீண்டும் ரமா-உமா கதைக்கே நான் வரவேண்டி நேரிடுகிறது
....................................................
14
உமா: வேண்டுமானால் நீ என் மடியில் படுத்துக்கொள்.
ரமா: ஏன்?
உமா: என்ன ஏன்?
ரமா: எனக்கு தெரியும். எதற்கு சொல்கிறாய் என்று.
உமா: எதற்கு?
ரமா: நல்லவளாட்டம் நடிக்காதே.
உமா: நான் சும்மாதான்…. பாசத்தோடுதான் சொன்னேன்.
ரமா: உன் பாசத்தைப் பற்றி எனக்கா தெரியாது.
உமா: ஒழிந்து போ…
15
ரமா: எவ்வளவு கதகதப்பாக இருக்கிறது உன் மடி. உன் தொடைகளைப் பற்றிக் கொண்டு அப்படியே தூங்கிவிடலாம் போல் இருக்கிறது.
உமா: ஏய்ய்… ஏய்ய் என்ன செய்கிறாய் நீ…
ரமா: உன் தொப்பையில் காது வைத்து கேட்கிறென். என்ன வினோதமான சத்தங்கள். சடு குடு… டுபு டுபு … சட குடு…. டுபுக்….. ட்ரிங்க்.. ட்ரியுங் …. ட்டாய்ங்….”
உமா: அய்யோ…. விடு ….. கூசுகிறது.
ரமா: நீ சிரிக்காதே… நீ சிரித்தால் உன் வயிறு குலுங்குகிறது….. ஒன்றும் கேட்கவில்லை.
உமா: நீ ஒன்றும் கேட்கவேண்டாம். தலையை நகர்த்து முதலில்.
ரமா: என்னை உன் குழந்தையாக நினைத்துக்கொள்.
உமா: நீ ஒன்றும் என் குழந்தை இல்லை.
ரமா: சரி ஏதோ ஒரு குழந்தை. நான் குழந்தையாகி விட விரும்புகிறேன்.
உமா: பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிட மாட்டோமா என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் யாரும் குழந்தைககளாவதில்லை. மாறாக, கிழவர்களாகத்தான் ஆவோம்.
ரமா: ஆமாம் இரண்டு மகிழ்ச்சியான கிழவிகள்!!
16
ரமா: உமா எனக்கு உன்னை ரொம்பப் ரொம்ப பிடிக்கும்
உமா: எ்னன திடீரென்று….
ரமா: சும்மா சொல்ல வேண்டும் போல் தோன்றியது
உமா:…………..
ரமா: உன்னை நினைத்தால் கண்முன் என்ன தோன்றுகிறது தெரியுமா?
உமா: ……………..
ரமா: திரட்சியான மேகங்கள், பெரிய பெரிய பூக்கள் அப்புறம் குளிர்ந்த நீரூற்றுகள்…
உமா: …………………..
ரமா: உன் வியர்வை. உன் உடல் வாசம் எல்லாமே எனக்கு பிடித்திருக்கிறது.
உமா:…………
ரமா: உன்னை என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?
உமா:………
ரமா: உன்னை அப்படியே தின்று விடப் போகிறேன்!!
உமா: மறுபடி ஆரம்பிக்கப் போகிறாயா… அய்யோ அப்படி வருடாதே. கூசுகிறது.
ரமா: ஒவ்வொரு உடலுக்கும் ஒரு வாசம் உண்டு தெரியுமா?
உமா:…..
ரமா: உன் வாசம் எப்படியிருக்கிறது சொல்லட்டுமா?
உமா:………….
ரமா: லேசாக பொசுங்கிய தாமரைப்பூவின் மணம் பொல் உள்ளது உன் வாசம்.
உமா:……………
ரமா: உன் வியர்வையோடு கலந்து வீசும் இந்த கமறலான நெடி என்னைத் திணற அடிக்கிறது.
உமா: அய்யோ என்ன செய்கிறாய்
ரமா: அசையாதேடி குண்டு….
உமா: என் தெய்வமே…..
ரமா:…………………..
உமா:……………..
ரமா:……….
உமா:…………..
ரமா:……………….
உமா: என்னை கொல்லாதேடி…. கண்ணே
ரமா:…………………..
உமா:……………….
ரமா:………………..
உமா :நீ நிஜமாகவே நாய் தான்.
ரமா:……………
உமா: என் செல்ல நாய்க்குட்டி நீ
ரமா:……..
உமா: கடவுளே. நான் செத்துக்கொண்டிருக்கிறேன்!!!
மிகவும் நுட்பமான உடல் உணர்வுகளையும் அவற்றின் பிரதிபலிப்புகளையும் வாய்விட்டு வெளிப்படையாகச்சொல்லாமல் திலீப் குமார் ஓர் புறமுகப் பார்வை மற்றும் கோணத்தில் வெளிப்படுத்துவது நம்மை அந்தப் பாத்திரங்களோடு ஒன்றாகி செய்கிறது.,இது technically subtle approach
கதை சொல்வதில் ஒரு நாடக வடிவிலே நாடகங்கள் வெளிப்படுத்த முடியாத புலன் உணர்வுகளை வாசகருக்கு TRANSMIT செய்வதை எனது வாசக அனுபவத்தில் நான் இது வரை நேர்கொண்டதில்லை.
No comments:
Post a Comment