Sunday, 26 June 2016

திலீப்குமார் என்ற எழுத்தாளர்

                                

ஜெயகாந்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப் பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு ஒரு முன்னுரையில் ஆங்கிலத்தில் பதிலளிக்கையில்  
. என்ற  மற்றொரு கேள்விக்குப் பணிவோடு பதில் அளிக்கிறார். 
...The post-Independence fifties, the decade of a young nation filled with hopes and aspirations, saw a proliferation of magazines which not only drew in new writers but also spawned many a new kind of writer, subscribing to the spirit of the magazine he/she wrote for. Writer Jayakanthan’s appearance and growth is demonstrative of this interesting and complex phenomenon. He started his writing career in the 1950s by contributing to left-leaning little magazines and re-emerged a decade later in the popular weekly Ananda Vikatan. His progressive and unconventional themes, his earthy characters from all walks of life and his somewhat dramatic and loud but engaging style captured the imagination of a large readership. The aura of his persona and stories was so intense at the time that it not only reshaped the image of the Tamil writer but also reinterpreted the notions associated with light reading and popular magazines.என்றார்.

Still, you agree Jayakanthan is a personality for  the contribution of Tamil literature? என்ற மற்றொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் மிக்க பணிவோடு சொல்கிறார்.
 In any case how can any one be very impolite to his elementary school teacher ?  JK is like an exam hall ticket. You need it to enter the exam hall. But once you are in it is only a piece of paper. Nevertheless it has its own value.  

 கோவையில்  ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தன் அனுபவங்களையும், தான் சந்திக்க நேரும் மனிதர்களைப் பற்றியும் தொடர்ந்து சிறுகதைகளாக கணையாழி போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வியாபார நிமித்தமாக புலம் பெயர்ந்து வந்த குஜராத்திக் குடும்பங்களையும், அவர்கள் சமுதாயத்தில் நிலவும் வறுமை, முதுமை போன்ற எண்ணற்ற தமிழ் நாட்டில் வாழும் குஜராத்திகளின் உலகை திலீப்பின் சிறுகதைகள் பலவும் நமக்குச் சித்தரிக்கின்றன. 
ஒரு முக்கிய விஷயத்தை நாம் நினைவு கூறவேண்டும். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களுக்கு வந்தவர்கள் ஒரு தனித்த தீவாக தமக்குள் சமூக உறவு வட்டத்தை அமைத்துக் கொள்வார்கள். அங்கே என்ன நடக்கிறது? அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்குள்ளும் மனித உறவுப் பிரச்சினைகள் இருக்கும் என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது. அப்படி அவர்கள் வெளிப்படமாட்டார்க. அந்த சமூகத்தைச் சார்ந்த தமிழில் எழுதத்  தெரிந்த ஒருவர் மூலமே நம்மால் அவர்கள் பற்றி  அறிய முடியும் . நானும் என் வாசக அனுபவமும்  இப்படி ஒரு தமிழர் அல்லாத பிற ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பது குறித்து [கி.ராஜநாராயணன் கூட தெலுங்கர் பற்றி இவ்வளவு கூரிய சமூகப் பார்வை தரவில்லை] இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் பிரதிபலித்த  எழுத்துக்களை வாசித்ததில்லை. திலீப் குமார் குஜராத்திகள் பற்றி மட்டுமின்றி மராட்டிகள், உருது பேசும் முஸ்லிம்கள் எனப் பல சமூகத்தினரை ஒரு ரியாலிஸ உணர்வோடு பிரதிபலிக்கிறார் அந்த வகையில் திலீப் குமார் ஒரு தனிச் சிறப்பு பெறுகிறார். சினிமாக்களில் காண்பிக்கப் படும் செயற்கையான குஜராத்திய சமூகம் வேறு. [பெரும்பாலும் மார்வாடிகளையும் பட்டாணியர்களையும்  தான் தமிழ் சினிமா வெளிக் காட்டி யிருக்கிறது.குஜராத்திகளை அல்ல.  அதுவும் ஈவிரக்கமற்ற பணம் சம்பாதிப்பது தவிர வேறு ஏதும் அறியாத மனிதர்களாக அவர்கள் சித்தரிக்கப் படுவார்கள்] யதார்த்தத்தில் அவர்களுக்கு ஏற்படும் சமூக, உளவியல் பிரச்சினைகள் வேறு என்பதை இவரது சிறுகதைகள் விளக்குகின்றன.
தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. படித்தவுடன் மறந்து விடக் கூடிய பொழுதுப் போக்குக் கதைகள் அல்ல அவை. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை. 
மனித உறவு என்ற பொத்தாம் பொதுவான  சிமெண்ட்டுப் பூச்சில் அடங்கிவிடுவன அல்ல அவர்  கதைகள். கருத்தும் வேதனையும் விமர்சனமும் அடியில் ஓடும் அருவி போல மௌன அளவில் மிகவும் undertoneல் சொல்கிற கதைகள் அவை. 
கோவையில் இவரது சிறு வயது அனுபவங்களும் இவர் பழக நேர்ந்த மனிதர்களும் இவரது கதைகள் வாயிலாக நமக்கு அறிமுகப் படுத்தப் பட்டு நம்மால் மறக்க இயலாத மனச் சித்திரங்களையும், உணர்வுகளையும் அளிக்கின்றன.  இவரது கதை மாந்தர்களாக வரும் பாத்திரங்களின் மனிதாபிமானங்களும், தீர்வுகளும் நம்முள் ஆழ்ந்த விவாதத்தையும், சிந்தனைகளையும் கிளர்ந்தெழச் செய்பவை.[தொடரும்]

No comments:

Post a Comment