ஓர் எழுத்தாளர் முதலில் வாசகனாகத்தான் வளர்கிறார். நான் யாரையும் வாசித்ததே இல்லை என்று கம்பீரக்குரல் கொடுத்துத்தம்மை தனிப்பிறவி என்று காட்டிக் கொள்ள ஒரு ஸ்டார் வால்யூவுக்காக வேண்டுமானால் ஒருவர் கர்ஜித்துப் பார்க்கலாம். ஆனால் நாம் என்ற சமூக உறுப்பினர் அனைவரும் ஒரு சமூகக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு சமூகம் நெருக்கித்தள்ளுகிற ஒருபண்பாட்டுத் தள்ளுமுள்ளுவில் இருந்துகொண்டே தான் வாழ்கிறோம். கண்களை மூடிக்கொண்டு ,மூக்கைப் பொத்திக்கொண்டு, காதுகளை மூடிக்கொண்டு காந்திஜியின் மூன்று குரங்குப் பொம்மை ஸ்டைலில் நாம் ஒதுங்கிச் சென்றால் கூடக் காலச் சுழல் நம்மைச் சுற்றி இழுத்துச் செல்கிறது.
நமது தந்த கோபுர வாசம் நிலையாகி விடுவதில்லை. அடிக்கடி தரைக்கு இறங்கி வரவேண்டி இருக்கிறது. நல்ல வாசகராக உருவாகிற பயிற்சியில் நம்மை அறியாமல் நாலையும் படிக்க நேரிடுகிறது. அப்படி வாசிக்க நேரும்போது நம் மனப்பான்மை அல்லது சொந்தபண்புகள் நமது சொந்த வார்ப்பை உருவாக்குகின்றன. அந்த வார்ப்பு , புதிய வார்ப்பா அல்லது பழைய வார்ப்பா என்பது நாம் வாசித்து ரசித்தவற்றை மதிப்பிடுவதைப் புலப்படுத்தும் போது வெளியாகி விடும்
திலீப்குமார் என்ற வாசகர் விமரிசன ரீதியாக ஆர்.சூடாமணி என்ற எழுத்தாளரைப் பற்றி தொகுப்புரையில் மதிப்பிடும் போது ..
நமது தந்த கோபுர வாசம் நிலையாகி விடுவதில்லை. அடிக்கடி தரைக்கு இறங்கி வரவேண்டி இருக்கிறது. நல்ல வாசகராக உருவாகிற பயிற்சியில் நம்மை அறியாமல் நாலையும் படிக்க நேரிடுகிறது. அப்படி வாசிக்க நேரும்போது நம் மனப்பான்மை அல்லது சொந்தபண்புகள் நமது சொந்த வார்ப்பை உருவாக்குகின்றன. அந்த வார்ப்பு , புதிய வார்ப்பா அல்லது பழைய வார்ப்பா என்பது நாம் வாசித்து ரசித்தவற்றை மதிப்பிடுவதைப் புலப்படுத்தும் போது வெளியாகி விடும்
திலீப்குமார் என்ற வாசகர் விமரிசன ரீதியாக ஆர்.சூடாமணி என்ற எழுத்தாளரைப் பற்றி தொகுப்புரையில் மதிப்பிடும் போது ..
"....சூடாமணி,வெகுஜன இதழ்கள் என்று கூறப்படும் பெரிய பத்திரிக்கைகளில் எழுதியதோடு ’தீபம்’, ’கணையாழி’, ’ஞானரதம்’, ’சதங்கை’, போன்ற இலக்கிய சிற்றிதழ்களிலும் அவர் தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வந்துள்ளார். அவர் துவக்கத்தில் சில நாவல்களை எழுதியிருந்தாலும், தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ’சிறுகதை’யென்ற வடிவத்தையே பெரிதும் சார்ந்திருந்தார் என்று கருதலாம். எழுத்துலகில் இன்றும் அவர் ஒரு சிறுகதையாசிரியராகவே அடையாளம் காணப்படுகிறார்.
..இதில் ஓங்கிய கர்ஜனையும் ஜெயகாந்தனையும், அடங்கிய குரலும் சூடாமணியையும் இனம் காணலாம். சூடாமணியின் படைப்புலகத்தை இந்தக் கூற்றின் ஒளியில் தான் நாம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
..இதில் ஓங்கிய கர்ஜனையும் ஜெயகாந்தனையும், அடங்கிய குரலும் சூடாமணியையும் இனம் காணலாம். சூடாமணியின் படைப்புலகத்தை இந்தக் கூற்றின் ஒளியில் தான் நாம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சூடாமணியின் பெரும்பாலான சிறுகதைகள் அதிகம் விற்பனையாகும் பெரிய பத்திரிக்கைகளில்தான் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக, வெகுஜனப் பத்திரிக்கைகளில் வெளியாகும் சிறுகதைகள் வாழ்க்கைக் குறித்த மேலோட்டமான பார்வைகளையே முன்னிறுத்துகின்றன ... சமூகப் பண்பாட்டு முரண்களின் மையப்புள்ளிகளை இவை தொடுவதே இல்லை.... எழுத்து முறையிலும் கூட, சுவாரஸ்யமோ தேர்ச்சியோ காணப்படுவதில்லை... என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்துள்ளன. இதன் காரணமாக சூடாமணியின் கதைகளின் இலக்கியப் பண்புகள் குறித்து ஒருவித அலட்சியமும் தெளிவின்மையும் நிலவி வருகிறது. சூடாமணி அவ்வப்போது சிறு பத்திரிக்கைகளில் எழுதி வந்திருந்தாலும், தமிழின் ”இலக்கியப் பிரமுகர்கள்” அவரது கதைகளை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டியே வந்திருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இத்தகைய புறக்கணிப்பு நியாயமற்றதும் சற்றே மிகையானதும் கூட.
சூடாமணி, எழுதத் துவங்கிய காலம் முதலே தன்னை சமூக பிரக்ஞையும், நுண்ணுணர்வும் மிக்க ஒரு படைப்பாளியாக நிறுவி வந்துள்ளார். தனது வரையறுக்கப்பட்ட சூழலையும் மீறி, மனித உறவுகளின் பல்வேறு நிலைகள் குறித்து அவருடைய அக்கறைகளையும், ஆதங்கங்களையும் நம்பகத்தன்மை மிகுந்த , அந்தரங்கமான ஒரு தொனியில் தொடர்ந்து அவர் முன்வைத்து வந்துள்ளார்.
சூடாமணி பரந்த வாசிப்பைக் கொண்டிருந்தார் என்றாலும், உரைநடையின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்தார் என்றோ பரிசோதனை ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டார் என்றோ கூறமுடியாது. நவீனத்துவம் தமிழில் முகிழ்க்கத் துவங்கியதற்கு முன்பு தனது எழுத்து முறையை வடிவமைத்துக் கொண்டவர் என்ற வகையில் அன்றைய தமிழ் சிறுகதையின் சம்பிரதாயத்திற்கு உட்பட்டே அவர் செயல்ப்பட்டார்..
சூடாமணியின் கதைகளில் சிறு குழந்தைகள், திருமணத்துக்காகக் காத்திருக்கும் பெண்கள், வாழ்க்கையில் அலுத்துப் போன நடுவயது பெண்கள், அரைக்கிழவிகள், மூதாட்டிகள், நல்ல மனமும் கள்ளமனமும் கொண்ட ஆண்கள், கனவான்கள், தோட்டக்காரர்கள் என்று ஏராளமானவர்களை பல்வேறு சூழ்நிலைகளில் நம்மால் பார்க்க முடியும். இப்பாத்திரங்களின் வாயிலாக மனித இயல்பின் பெரும்பாலான முரண்களை ஏளனம் தவிர்த்த, தணிந்த குரலில், பெருமளவு வெற்றிகரமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். கதைகளின் கடைசி கட்டத்தில் பாத்திரங்கள் அடையும் மனமாற்றமும் பரிணாமமும் கூட நாடகத்தன்மையற்ற அடக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கவிதை மற்றும் நாடகத்தோடு ஒப்பிடும்போது சுதந்திரம் குறைவான உரைநடையில் சற்றும் ஆயாசம் கொள்ளாமல் திடமான நம்பிக்கையுடன் செயல்பட்டது என்பது அவரது அக்கறைகள் கதை கூறலுக்கப்பாலும் வாழ்க்கையின் எளிய புதிர்களை நோக்கியே கவனம் கொண்டிருந்தன என்று சொல்லலாம். அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வரியும் மனித உறவுகள் குறித்த அவரது ஆழ்ந்த கரிசனத்தின் அடிப்படையில் உருவானதாகவே தெரிகிறது. தவிர, எச்சந்தர்ப்பத்திலும் சூடாமணி தன் கதைகளில் எதேச்சையாகக் கூட தன்னிரக்கம் கசிந்துவிட இடம் கொடுத்ததில்லை. இவ்வகையான கட்டுப்பாடும் பண்பும் அவரது மனவிசாலத்திற்கும், இலக்கிய நாணயத்திற்கும் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.
எந்த ஒரு மொழியின் சிறுகதை வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் சிறுகதையின் வளர்ச்சிப் போக்குக்கும், பத்திரிகைகளுக்கும் ஒரு நெருங்கிய உறவு இருப்பதைக் காணலாம். இதில் பெரிய பத்திரிக்கைகள், இலக்கிய பத்திரிக்கைகள் இரண்டுமே அடங்கும். சிறுகதையில் பரிசோதனை செய்யவும், நல்ல படைப்புகள் உருவாவதற்கும், இலக்கியப் பத்திரிக்கைகள் களம் அமைத்துத் தந்தன என்பதைப் போல, பெரிய பத்திரிக்கைகள் சிறுகதையின் நுட்பங்களை வரையறுத்து எளிமைப் படுத்தின என்பதே உண்மை. 1940களிலிருந்தே தமிழில் பெரிய பத்திரிக்கைகள் சிறுகதைக்கு ஆற்றிய பங்கைவிட ஏற்படுத்திய பாதிப்பே கணிசமானது. இன்று வரையிலும் மேற்குறித்த இரண்டு வேறு வேறு பத்திரிக்கைத் தளங்களும் தம் தம் குணாம்சங்களை கறாராகவே பிரதிபலித்து வருகின்றன.
1950இன் பிற்பகுதியில் சூடாமணி எழுதத்தொடங்கியபோது, தமிழ் சிறுகதை ஒரு குறிப்பிட்ட வளத்தையும் திசையையும் எட்டிவிட்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் அபிலாஷைகளும் நம்பிக்கைகளும் கட்டுக்குலையாமல் மிளிர்ந்து கொண்டிருந்த காலம் அது. அதோடு, கல்கி, புதுமைப்பித்தன் என்ற இருவேறு தாரைகள் உருவாக்கியிருந்த கோடுகளும் தற்காலிகமாக மங்கத் துவங்கிய நேரம் என்றும் கூறலாம். அப்போது, சிறுபத்திரிக்கை உலகில் இன்று மதிக்கப்படும் எழுத்தாளர்கள் பலரும் கூட அவ்வப்போது பெரிய பத்திரிக்கைகளிலும் எழுதி வந்தார்கள்.
இந்த கிட்டத்தட்ட ”அபேத” சூழ்நிலையில் தமிழ் சிறுகதை, வடிவத்தில் நவீனத்துவத் தின் சாயலும், மொழி பயன்பாட்டில் தமிழின் வசீகரமான வெளிப்பாடுகளும், உள்ளடக்கத்தில் எதார்த்தவாதத்தின் முனைப்பும் கொண்டு, மரபும் புதுமையும் கலந்த ஒரு விஷேச அனுபவமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. தனி மனிதன், குடும்பம், சமூக நீதி, ஜன நாயக மதிப்பீடுகள் என்று பல்வேறு அக்கறைகளை பிரதிபலிக்க உதவிய இந்த பாணி எழுத்துதான் நம்பத்தகுந்த உத்தியாகக் கொள்ளப்பட்டது.
கண்ணன் பெருந்தூது (ஆ மாதவையா), சாப விமோசனம் (புதுமைப்பித்தன்), ஆற்றாமை (கு.பா.ரா), மாறுதல் (மௌனி), போன்ற கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழித்து தமிழ் சிறுகதை மீண்டும் இப்படி ஒரு தளர்ச்சியான கோலத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது ஒரு சுவாரஸ்யமான நிலை. உள்ளடக்கத்தின் மேன்மையை முன்னிட்டு வடிவத்தின் நெகிழ்ச்சிக்கு சலுகைகள் அளிக்கவும் பெறவும் பட்டன. தமிழ் வாசகர்கள் மனதிலும் இவ்வகை சிறுகதைகள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தின. நடுத்தர வர்க்கமும் கீழ்-நடுத்தர வர்க்கமும் வாசிப்பை நோக்கி முன் நகர்ந்த தருணமிது. இலக்கியத்தைக் துய்க்கும் சமூக மனம் இதில் உணர்வுப் பூர்வமாக பங்குபெறவும், எழுச்சி கொள்ளவும், இடமளிக்கும் வடிவமாக அது அமைந்திருந்தது. இந்த சிறுகதை மரபை எழுத்தாளர்கள் தான் உருவாக்கினார்கள் என்பதைப் போலவே இந்த சிறுகதை மரபும் கூட சில எழுத்தாளர்களையும் அவர்களது படைப்பு முறைகளையும் வார்த்தது என்று கொள்ளலாம். இந்த வகை எழுத்தின் குறிப்பிடத்தக்க பிரதிநிதிகளாக கு.அழகிரிசாமி, விந்தன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரைச் சொல்லலாம்.
அவரது மிகச் சிறந்த கதைகளில் கூட தளர்ச்சியான, நுட்பம் குறைவான வரிகளை நாம் எளிதாக சுட்டிக் காட்டிவிடலாம். ஆனால் இத்தேர்ச்சிக் குறைவிற்குப் பின்னால் இயங்கும் ஒரு மாசற்ற எளிய மனதையும் கூட இத்தேர்ச்சிக் குறைவின் வழியாகவே தான் நாம் கண்டு கொள்ள முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சூடாமணியின் “டாக்டரம்மா அறை” என்ற கதையை ஒரு தொகுப்புக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க எடுத்துக்கொண்டோம். அவரது, மற்றும் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளில், இதுவும் ஒன்று. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்துப் பெண்ணின் கதை இது.
. சூடாமணியின் கதைகளில் இவ்விரண்டு வகையிலான அத்துமீறல்களும் இல்லை. அவரை இவ்விஷயத்தில் நடுவாந்திரத்தில் நின்ற ”நடுநிலையாளர்” என்றே அழைக்கலாம். வாசகனின் கற்பனை வளத்திற்கு அறைகூவல் விடும் மொழி சாகசம் அவரிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் ஒரு மாலை நடையின் ஆசுவாசம் அவர் கதைகளில் நமக்கு நிச்சயம் கிட்டும்.
சூடாமணி 50 ஆண்டுகளாகக் எழுதி வந்துள்ளார். அவரது எழுத்துக்குரிய மரியாதையும், கௌரவமும் பல சந்தர்ப்பங்களில் கிடைத்தும் அதை நேரடியாக எற்றுக் கொள்ளமுடியாத, மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு சூழலிலிருந்து அவர் இதை செய்தார். சுய இரக்கத்தின் கூட்டுக்குள் பதுங்கிக் விடாது, எச்சூழ்நிலையிலும் சிறியதொரு கசப்புணர்வையும் வெளிக்காட்டாது , ’எழுத்து’ என்ற நடவடிக்கையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது. எழுத்தாளர்களுக்கும் சரி, வாசகர்களுக்கும் சரி, இலக்கியம் என்பதே ஒரு அரூப வெளிப் பயணம்தான். இதில் அடையும் வெற்றிகளும் தோல்விகளும் கூட நிதர்சனமானவையல்ல.
சூடாமணி கதைகளின் பிரதான அம்சம் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூட்டிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்பு இது. இவ்வுலகம், நிம்மதியைக் குலைத்துவிடும் பேரழகுகளால் மட்டுமல்ல; மனம் விரும்பும் சிறு சிறு, சுமாரான அழகுகளாலும் கூட்த்தான் நிரம்பியுள்ளது. இந்த எளிய ஆனால் மதிப்பு மிக்க உண்மையை தன் எழுத்துக்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணி..."
இது திலீப்குமாரின் மதிப்பீடு. இங்கே அவர் தராசு எந்தவித போலிப் புனைவும் இன்றி அதே சமயம் எள்ளலோ கிண்டலோ தம் மேதமையை வெளிக்காட்டும் முயற்சியோ , கொடுத்த பொறுப்பை விட்டு லகுவாக நழுவும் சாமர்த்தியமோ இன்றி எடை போட்டிருக்கிறது
மதிப்பீடுகளை வைத்து ஒரு எழுத்தாளரை அவர் எப்படிப்பட்டவர் என்று மதிப்பிட அவரே இடமளித்து விடுகிறார்.
திலீப்குமாரின் இலக்கிய உணர்வுகள் என்னவென்று நாம் மேற்கண்ட தொகுப்புரை ஒன்றின் மூலம் வெகு எளிதில் உணர்கிறோம்[தொடரும்]
இது திலீப்குமாரின் மதிப்பீடு. இங்கே அவர் தராசு எந்தவித போலிப் புனைவும் இன்றி அதே சமயம் எள்ளலோ கிண்டலோ தம் மேதமையை வெளிக்காட்டும் முயற்சியோ , கொடுத்த பொறுப்பை விட்டு லகுவாக நழுவும் சாமர்த்தியமோ இன்றி எடை போட்டிருக்கிறது
மதிப்பீடுகளை வைத்து ஒரு எழுத்தாளரை அவர் எப்படிப்பட்டவர் என்று மதிப்பிட அவரே இடமளித்து விடுகிறார்.
திலீப்குமாரின் இலக்கிய உணர்வுகள் என்னவென்று நாம் மேற்கண்ட தொகுப்புரை ஒன்றின் மூலம் வெகு எளிதில் உணர்கிறோம்[தொடரும்]


